முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்க போலீசாருக்கு அனுமதியில்லை: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி, காவலர் சீருடையில் இருப்பதால் பயணச் சீட்டு எடுக்க முடியாது என்று கூறி போக்குவரத்துத் துறை ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,

காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து