முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Tamilnadu-flood-2024-05-23

சென்னை, கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் கடந்த 22-ம் தேதி வரை 12.44 செமீ மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவான 12.5 செமீயை விட சுமார் ஒரு சதவீதம் குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர். 

இதன் மூலம் கடந்த 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் மழையால் 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.  கனமழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 40 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. 

 ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 பேர் நேற்று காலை வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4,385.40 ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து