முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Thiruvalliuvar-2024-05-24

சென்னை, திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழிபாடு செய்தார்.

உலகப்பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோவிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.  இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, வள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து