முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை போன்றதொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
Nasa

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சூரியக் குடும்பத்துக்கு அருகே, உயிர்கள் வாழ உகந்த வகையில் இந்த கிகம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஓஐ-715பி என்று இந்த சூப்பர் பூமிக்கு அடையாளப் பெயர் சூட்டபப்ட்டுள்ளது. இது பூமியை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பதால் சூப்பர் பூமி என அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து 137 ஒலி ஆண்டுகள் தொலைவில்தான் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த கிரகத்தின் சிவப்பு நட்சத்திரம், நமது பூமியின் சூரியனை விடவும் சற்று குளிரானதாகவும் சின்னதாகவும் இருக்கிறதாம். இந்த சிவப்பு நட்சத்திரத்திலிருந்து சூப்பர் பூமி அமைந்திருக்கும் இடைவெளியினால், இந்த சூப்பர் பூமமியில் தட்பவெப்பநிலையானது மிதமாக இருப்பதாகவும், தண்ணீரும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிர்கள் வாழ முடியும் என்று தற்போது நம்பப்படுகிறது.

இந்த கிரகத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இது அடிக்கடி சிவப்பு நட்சத்திரத்துக்கு அருகே செல்கிறது. எனவே, அதனை எளிதாக கண்காணிக்க முடிவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைக்கு இது பூமியை விட பெரியதாக, நெப்ட்யூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை விட எடை குறைந்த, வாயு, பாறைகள் கலந்த கலவையாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து