முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
Chennai Airport

சென்னை, சென்னையில் ஜூன் மாதம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் மூலம், சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதனால், விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு சோதனை மற்றும் பயணிகளின் அடையாளத்தை சோதித்தல் உள்ளிட்டவற்றின் நேரம் குறையும். ஏற்கனவே, டிஜியாத்ரா, சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் தர தாமதமானதால், அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.

பல்வேறு விமான நிலையங்களிலும் கடந்த ஆண்டு முதல் இந்த டிஜியாத்ரா வசதி கொண்டுவரப்பட்டதால், பல லட்சம் விமானப் பயணிகள் அதன் பயனை அடைந்துள்ளனர். ஏற்கனவே 14 விமான நிலையங்களில் இந்த வசதி உள்ளது. அடுத்த மாதம் மேலும் 14 விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு அமைச்சகங்களின் பணியும் இருப்பதால், ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் தனித்தனி ஒப்புதல் பெறுவதால், சென்னை விமான நிலையத்துக்கு இந்த வசதி வரதாமதமாகியிருக்கிறது. ஆனால், அடுத்த மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் விமான பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும். தேர்வு செய்யப்பட்ட விமான நிலையங்களில் 50 சதவீத பயணிகள் இந்த டிஜியாத்ராவை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து