முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Amit-Shah 3

Source: provided

புதுடெல்லி : மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டோ, ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், மணிப்பூர் தலைமை செயலாளர் வினீத் ஜோஷி, மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூர் கலவரத்தால் வடகிழக்கில் நிலவிவரும் சூழல் குறித்து மணிப்பூர் கவர்னர் அனுஷியா உய்க், உள் துறை அமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு அவ்வபோது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் தமாங் பாதுகாப்பு வாகனத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பு இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூண்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து