முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி20 போட்டிகளில் 27 பந்துகளில் அதிவேக சதம் விளாசி சாதனை

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      விளையாட்டு
Sahil-Chauhan 2024-06-18

Source: provided

நியூயார்க் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசி எஸ்டோனியா வீரர் சஹில் சௌகான் சாதனை படைத்துள்ளார்.

9 ரன்களுக்கு... 

எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சைப்ரஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்டோனியா அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய சஹில் சௌகான் அதிரடியில் மிரட்டினார். சைப்ரஸ் அணியின் பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான ஆட்டத்தால் திணறடித்த சௌகான், மைதானத்தில் சிக்ஸர் மழையைப் பொழிந்தார்.

அதிவேக சதமாக...

அதிரடியாக விளையாடிய சஹில் சௌகான் 27 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்னதாக, நமீபியாவின் ஜேன் நிக்கோல் லாஃப்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதம் விளாசியதே சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை சஹில் சௌகான் தற்போது முறியடித்துள்ளார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சஹில் சௌகான் 27 பந்துகளில் அடித்துள்ள இந்த சதமே அதிவேக சதமாக உள்ளது. இதற்கு முன்னதாக, டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து