முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன்களாக ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      விளையாட்டு
ragul-2024-07-12

மும்பை, இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. 

இந்திய அணியை ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் வழிநடத்தவுள்ளனர்.

வரும் 26-ம் தேதி...

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 27-ல் இரண்டாவது டி20 போட்டியும், ஜூலை 29-ல் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 1,4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

புதிய பயிற்சியாளர்...

இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். அதேபோல இலங்கை அணியும் அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா தலைமையில் களமிறங்குகிறது. இலங்கைக்கு எதிரான இந்த இருதரப்பு தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முதல் முறையாக... 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலும் வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து