முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்தத் தாழ்வு, மண்டலமாக வலுப்பெற்றது: தமிழகத்தில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      தமிழகம்
Puyal 2023 06 11 - Copy

Source: provided

சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று (ஜூலை 19) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (20.07.2024) அதிகாலை ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேற்கு-வடமேற்கே நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஷ்கரைக் கடந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்ன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து