முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      உலகம்
Intel

வாஷிங்டன், உலகம் முழுக்க தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 

பணிநீக்க நடவடிக்கை காரணமாக இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமாராக ரூ. 8.28 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏ.ஐ. தொழில்நுட்ப துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து