முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025 பிப். வரை விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் இருப்பார் : நாசா அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      உலகம்
NASA 2024 08 08

Source: provided

வாஷிங்டன் : 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு சென்றார். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் ஜூலை 13-ம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அப்போது பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அவற்றை சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வந்தது. 

இந்நிலையில் 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. 

விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, டெப்லான் சீல் பாதிப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது.  தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்த பிறகே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியும் என நாசா விளக்கம் அளித்துள்ளது. 

போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்வெளி ஓடத்துக்கு பதில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் ஒடம் மூலம் பூமிக்கு திரும்புவார் என்றும் நாசா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து