முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம்: 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்களை அனுப்பி வைத்தது மத்திய அரசு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Manipur 2024-09-11

இம்பால், மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த 2 ஆயிரம் சி.ஆர்.பி.எப். வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் குகி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர். கலவரத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இருப்பினும் 16 மாதங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயவில்லை. 

இந்த சூழலில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் புதிய யுக்தியை வன்முறையாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயம் அடைந்தனர். டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாநிலத்தில் உடனடியாக அமைதியை மீட்டெடுக்க கோரியும் 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக மேற்கு இம்பால், தெற்கு இம்பால் மற்றும் தவுபால் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த தெலுங்கானா, ஜார்கண்ட்டில் இருந்து 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்களை சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், டிரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

 மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மணிப்பூர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த பல்கலைக் கழகத்துடன் 2 மருத்துவ கல்லூரிகள் உள்பட 116 கல்லூரிகள் இணைந்துள்ளன.  புதிய தேர்வு காலஅட்டவணையை பற்றி அறிந்து கொள்ள manipuruniv.ac.in என்ற வலைதளத்திற்கு சென்று மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும்.  மறுதேர்வு தேதிகள் பற்றிய அடுத்த அறிவிப்புகளை அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வ பல்கலைக் கழக வலைதளம் உள்ளிட்ட வழிகளை தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை மேனிலை மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான இணை செயலாளர் லைஷ்ராம் டோலி தேவி பிறப்பித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து