முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Veena-George 2023 06 20

Source: provided

திருவனந்தபுரம் : நிபா வைரசுக்கு வாலிபர் பலியானது குறித்து கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கமளித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து 24 வயது வாலிபர் உயிரிழந்துள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 26 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த வாலிபர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்து உள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த யாருக்காவது நோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியுமாறு அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாலிபருடன் தொடர்பில் இருந்த 26 பேரில் முதல் கட்டமாக 13 பேரின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்து உள்ளது. 2-வது கட்டமாக 13 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளது. மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும். நோய் பாதித்து 9 நாட்கள் கடந்தால் மட்டுமே அறிகுறிகள் தென்படும். அந்த நாட்கள் முக்கிய காலகட்டமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து