முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 கிரிக்கெட்டில் குசல் பெரேரா புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      விளையாட்டு
Sri-Lanka 2024-07-08

Source: provided

தம்புல்லா : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் குசல் பெரேரா புதிய சாதனையை படைத்துள்ளார்.

2 போட்டிகள்... 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரேஸ்வெல், ஜகாரி போல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலங்கை வெற்றி...

பின்னர் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் அசலன்கா 35 ரன்களும், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ் தலா 23 ரன்களும் அடித்தனர். குசல் பெரேரா இந்தப் போட்டியில் அடித்த 23 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 1904 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதிக ரன் அடித்த இலங்கை வீரர்கள்:

1. குசால் பெரேரா: 1904 ரன்கள்.

2. திலகரத்னே தில்ஷன்: 1889 ரன்கள்.

3. குசல் மெண்டிஸ்: 1840 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து