முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      தமிழகம்
RBU 2023-08-22

சென்னை, சவால் விடுவதை விட மக்களை காப்பதுதான் முக்கியம் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அத்துடன், யார் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என விவாதிக்க தயாரா? என முதலவர் நோக்கி கேள்வியெழுப்பினார். எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும், நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் எனவும் தெரிவித்தார். அத்துடன், திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது எனவும் வினவினார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுடன் விவாதித்த தயாராக இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என கூறினார். அத்துடன், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியும், அனுபவமும் இல்லை என கூறிய ஆர்.பி.உதயகுமார், சவால் விடுவதை விட மக்களை காப்பதுதான் முக்கியம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து