முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் குடியுரிமை பெற அமெரிக்கர்கள் திடீர் ஆர்வம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

லண்டன் : பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்ததாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம்வரையில் மட்டும் 6,618 அமெரிக்கர்கள், பிரிட்டன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். இது, பதிவுகள் தொடங்கப்பட்ட 2004 ஆம் ஆண்டில் இருந்து அதிகளவிலான வருடாந்திர எண்ணிக்கை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு இடையில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பெறப்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதுவும், எந்தவொரு காலாண்டிலும் பெறாத அதிக எண்ணிக்கையே.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து, பிரிட்டன் செல்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆலோசனைகளையும், இதுவரையில் இல்லாத அளவில், அதிகமானோர் பெற்றதாக குடிவரவு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் மனைவி, பெற்றோர், குடும்பத்தினரைக் காரணமாகக் கொண்டு தான் பெரும்பாலானோர் குடியேறிய விரும்பியதாகவும், தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களுடன் பிரிட்டனில் குடியேற சிலர் விரும்பியதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இருப்பினும், டிரம்ப்பின் ஆட்சியால்தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேற முயல்வதாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து