முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு போர்க்குணம் இல்லை: பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

சண்டிகர் : பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் பிவானி பகுதியில் மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளில் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அவர், "நமது மக்கள் தங்கள் கைகளை கட்டிக்கொண்டு உயிரை இழந்திருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் ஒருவேளை அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் 3 பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது. பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் போராடியிருக்க வேண்டும். எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும். பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களிடம் போர்க்குணம், துணிச்சல் மற்றும் வைராக்கியம் இல்லை. எனவே, அவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. எம்.பி. சந்தர் ஜங்ரா பேசிய கருத்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், கணவரை இழந்த துக்கத்தில் இருக்கும் பெண்களை விமர்சிக்கும் வகையில் உள்ளது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், "பஹல்காம் தாக்குதல் ஏற்படுவதற்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்புவதற்கு பதிலாக, பா.ஜ.க. தலைவர்கள் இந்திய ராணுவத்தையும், உயிர் தியாகம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

அதே போல், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "பா.ஜ.க. ஒரு கட்சி அல்ல, மாறாக பெண்களுக்கு எதிரான மனநிலையின் சதுப்பு நிலம்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து