முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லல்லு பிரசாத் யாதவ்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
Lallu 2023-10-04

Source: provided

பாட்னா : பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லல்லு அறிவித்துள்ளார்.

லல்லுவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், நேற்று முன்தினம் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், தனது தோழி அனுஷ்கா யாதவுடனான தனது நீண்டகால உறவை அறிவித்து, அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் சமூகவலைதள பதிவில் பகிர்ந்து குறிப்பிட்டு இருந்தார். தேஜ் பிரதாப் அறிவித்த மறுநாள் நேற்று அவரது தந்தையான லல்லு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில், லல்லு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள் அல்லது மரபுகளுக்கு ஏற்ப இல்லை. அவரது பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மதிப்பு மற்றும் பொது ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால், கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து நீக்குகிறேன். கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. நான் எப்போதும் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவன். கீழ்ப்படிதலுள்ள குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து