எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்களின் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் மாநில நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த சூழலில் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளிகரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.
இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?’ என்றும், ‘டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் செல்கிறார் என்றும், ‘வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்’ என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்றல்ல நேற்றல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘ஆதரவளிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் தி.மு.க’. என்பது இந்தியாவின் பிரதமராக இருந்த இரும்புப் பெண்மணியின் சொற்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற பண்பட்ட அரசியல் தலைவர்களும் தி.மு.க.வின் நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நிதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக, மாநிலத்தின் முதல்வராக நானும் அதில் பங்கேற்கத் தீர்மானித்தேன். அதற்கான அறிவிப்பும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, ஊடகங்களில் வெளியானது.
குடும்பச் சொந்தங்கள் மீதும் வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாட்டிலும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்று, அங்கு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று பம்மாத்து செய்து, நான்கு கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து, தன்னையும் தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அடையாளமான கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர், என்னுடைய டெல்லிப் பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை ரசித்தபடியே டெல்லிக்குப் புறப்பட்டேன்.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், அனைவரையும் அவர் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினர். மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டம் அதற்கேற்ற வகையில் இருந்ததையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
2045-ம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தேன். அதாவது, தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10 சதவீதம் அளவிற்கு உள்ளது. அது 15 சதவீதம் அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். குறிப்பாக, தி.மு.க. ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது. அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாகத் திமுக இருப்பதை முன்னாள் முதல்வர் அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அதே வழியைத்தான் மேற்கொண்டார். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வழியில்தான், இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரில் ஊடுருவி, அப்பாவிச் சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி கொன்ற தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்குச் சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், தீவிரவாத ஒழிப்பிற்காக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் முதலமைச்சரான உங்களில் ஒருவனான என் தலைமையில் பேரணியும் நடைபெற்றது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்களே இத்தகைய பேரணியை நடத்தவில்லை என்றும், தி.மு.க. அரசு ஏன் நடத்துகிறது என்றும் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட விமர்சனங்களைப் புறந்தள்ளி, கூட்டணிக் கட்சியினர் பங்கேற்புடனும், முன்னாள் படைவீரர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்புடனும் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்தியாவில் தீவிரவாதத்திற்கு இடமில்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்தும் குழுக்களில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்று, தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான தங்கை கனிமொழி எம்.பி.
அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிலையைத் தெரிவித்ததுடன், பிரதமரிடம் தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் நேரடியாகவே வலியுறுத்தினேன். நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.க.வினரைக் குறிவைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை. அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எஃப்ஐஆர்-கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை சுப்ரீம் கோர்ட் கருத்துகள் மூலம் உறுதி செய்திருக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.
எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என்ற உறுதியை மக்கள் எடுத்துள்ளனர். அவர்களுக்கான பணியை மேற்கொள்வதே நம் கடமை.
தேர்தல் களமும் மக்கள் பணியும் இணைந்துள்ள நிலையில், உடன்பிறப்புகளான உங்களை ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். உங்களால் நான் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைநகர் சென்னைக்கு வெளியே நடைபெறுகின்ற முதல் பொதுக்குழு. தமிழ் வளர்த்த நகரமாம் மதுரையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி அனுமதி பெற்று, அதற்கான ஏற்பாடுகளை அவருக்கேயுரிய முறையில் சிறப்பாக மேற்கொண்டு வருவதை நாள்தோறும் கேட்டறிந்து வருகிறேன்.
திராவிடத்தின் அடுத்த தலைமுறை பாய்ச்சலுக்கும், தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஆர்த்தெழும் இயக்கமான திமுக எவருக்கும் எப்போதும் அடிபணிவதில்லை என்பதை உணர்த்தி, எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் நம் கழகத்தின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. உடன்பிறப்புகளை எதிர்நோக்கி மதுரை பொதுக்குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். நீங்களும்தானே?” என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து
24 May 2025ஹோவ் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
முன்னிலை...
-
ஜூன் 18-ல் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ்
24 May 2025முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
மெதுவான பந்துவீச்சு: பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு அபராதம்
24 May 2025லக்னோ : மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக சுப்மன் கில் நியமனம் - சாய்சுதர்சன், வாஷிங்டன் சுந்தருக்கு இடம்
24 May 2025புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்? - பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : டெஸ்ட் அணியில் இருந்து முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது.
-
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது: ஆர்.சி.பி. கேப்டன்
24 May 2025லக்னோ : ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்.சி.பி. கேப்டன் ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
-
கோலியை சந்தித்தது குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்த சிம்பு
24 May 2025சென்னை : கோலியை முதல் முறையாக சந்தித்தது குறித்த தன் அனுபவத்தை சிம்பு பகிர்ந்துள்ளார்.
'நீ சிங்கம் தான்'...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
அலைமோதும் கூட்டம்: திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
25 May 2025திருப்பதி : திருப்பதியில் இலவச தரிசன பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் சி.இ.ஓ.
25 May 2025புதுடெல்லி : இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.
-
கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லல்லு பிரசாத் யாதவ்
25 May 2025பாட்னா : பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வர
-
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 May 2025சென்னை : தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை
25 May 2025கோவை : கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
25 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.
-
தே.ஜ. கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை : 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
25 May 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
என்.ஓ.சி. நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
25 May 2025சென்னை : ‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) அளி
-
தொழில்நுட்ப பணிகளுக்கான கலந்தாய்வு: மே 29, 30-ல் நடைபெறும் என அறிவிப்பு
25 May 2025சென்னை : ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) குறிப்பிட்ட சில பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல
-
கேரள கடற்பரப்பில் முழுவதும் மூழ்கியது லைபீரிய கப்பல் : 24 பணியாளர்களும் உயிருடன் மீட்பு
25 May 2025திருவனந்தபுரம், : கேரளக் கடற்பரப்பில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் முழுவதும் மூழ்கியது.
-
பிரிட்டிஷ் குடியுரிமை பெற அமெரிக்கர்கள் திடீர் ஆர்வம்
25 May 2025லண்டன் : பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற டெல்லி மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
25 May 2025சென்னை : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்களின் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.
-
தானேவில் திடீர் பரபரப்பு: இளைஞர் கொரோனாவுக்கு பலி
25 May 2025மும்பை : தானேவில் 21 வயது இளைஞர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு : பிரதமர் நரந்திர மோடி பேச்சு
25 May 2025புதுடெல்லி : தேனீக்களை பாதுகாப்பது என்பது நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.