முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோவிலில் விராட் கோலி - அனுஷ்கா

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி நேற்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.

_________________________________________________________________________________________________________

தவறுகளை ஏற்க முடியாது: ப்ரீத்தி ஜிந்தா

நடப்பு ஐ.பி.எல். சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட் செய்தபோது டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “ஐ.பி.எல். மாதிரியான கிரிக்கெட் தொடரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நடுவர்களின் வசம் இருந்தும், இது மாதிரியான தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நடக்கக் கூடாது. ஆட்டத்துக்கு பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என அவர் உறுதியாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.

_________________________________________________________________________________________________________

ஆர்.சி.பி அணியில் இணைந்த ஹேசில்வுட்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் மீண்டும் பெங்களூரு அணியில் இருந்துள்ளார். இது தொடர்பான விடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

_________________________________________________________________________________________________________

ஜிம்பாப்வே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மே 22-ம் தேதி நாட்டிங்ஹமில் தொடங்கியது.  முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.  ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது.  

பாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. சோயப் பஷீரின் அபார பந்துவீச்சினால், ஜிம்பாப்வே அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது  

_________________________________________________________________________________________________________

சென்னை அணிக்கு ரெய்னா ஆதரவு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். 

அப்போது, நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டம் குறித்து சக வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரெய்னா, கழுகுகள் 4 நாட்கள் பறக்கவில்லை என்பதற்காக வானம் புறாக்களுக்கு சொந்தமாகிவிட முடியாது' என்று அதிரடியாக கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து