முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள கடற்பரப்பில் முழுவதும் மூழ்கியது லைபீரிய கப்பல் : 24 பணியாளர்களும் உயிருடன் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
Ship-2025-05-25

Source: provided

திருவனந்தபுரம், : கேரளக் கடற்பரப்பில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் முழுவதும் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் உயிருடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்.எஸ்.சி. எல்சா 3 கொச்சி கடற்கரையில் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். 21 பேரை இந்தியக் கடலோரக் காவல்படையும் மூன்று பேரை இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். சுஜாதாவும் மீட்டன. எம்.எஸ்.சி. எல்சா 3 கப்பல் 640 கொள்கலன்களுடன் மூழ்கியது. அவற்றில் 13 ஆபத்தான சரக்குக் கொள்கலன்களும் 12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்தன.  

மே 24 அன்று, விழிஞத்திலிருந்து கொச்சிக்குச் செல்லும் வழியில் எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கப்பல் மூழ்கத் தொடங்கி இருந்தது. உலகளாவிய தேடல் மற்றும் மீட்பு நெறிமுறைகளின்படி, இந்தியக் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களான எம்.வி. ஹான் யி மற்றும் எம்.எஸ்.சி. சில்வர் 2 ஆகியவையும் உதவிக்காகத் திருப்பிவிடப்பட்டன.

மாலை நேரப் பிற்பகுதியில், ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாட்டவர் உட்பட 24 பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு ஏற்பாடுகளுக்கு உதவ மூன்று மூத்தப் பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். இருப்பினும், கப்பலின் நிலை இரவு முழுவதும் மோசமடைந்து, மே 25, 2025 அன்று அது கவிழ்ந்தது. மூன்று பணியாளர்களும் கப்பலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஐ.என்.எஸ். சுஜாதா அவர்களை மீட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து