முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்..? - அணி தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      விளையாட்டு
Sai-Sutharson 11-04-2025

Source: provided

மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்? என  தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர்  விளக்கம் அளித்துள்ளார்.

சுப்மன்கில் கேப்டன்...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு 18 வீரர்களை அறிவித்தது. சுப்மன்கில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்சர்மா ஓய்வு பெற்றதால் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. ரிஷப்பண்ட் துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

சாய் சுதர்ஷன் தேர்வு...

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன், கருண் நாயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர் பிராஸ் அகமது, முகமது ஷமிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.

உயர்மட்ட திறன்...

சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கபட்டதை குறித்து தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியதாவது:- இங்கிலாந்து லயன்ஸ் அணி (இங்கிலாந்து ஏ) இந்தியா வந்த போது சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். செயல்பாடு காரணமாக அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரராக அவர் உள்ளார். இவ்வாறு அகர்கர் கூறினார்.

கவுன்டி அனுபவம்...

சாய் சுதர்ஷன் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கி லாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டியிலும் சாய் சுதர்ஷ னின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 29 முதல் தர போட்டிகளில் 1,957 ரன் கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து