முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் சி.இ.ஓ.

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
INDIA

Source: provided

புதுடெல்லி : இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

10வது நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியம் கூறியதாவது:  தற்போது நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு. நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம்.  இந்தியா இப்போது ஜப்பானை விட பெரியது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இப்போது நமக்கு முன்னால்  உள்ளன. திட்டமிட்டு சிந்திக்கப்படுவதில் நாம் உறுதியாக இருந்தால் இன்னும் 2 - 3 ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது பெரிய விஷயம் இல்லை." என்று தெரிவித்தார்.

வளர்ந்து வரும் சர்வதேச பொருளாதார பரப்பில், ஒரு மாற்று உற்பத்திக்கான மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வரும் வேளையில் இந்த மைல்கல் நிலை எட்டப்பட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் தனது பங்கினை ஆழப்படுத்தவும், தனது மேக் இன் இந்தியா உந்துதலின் கீழ் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்தியா முயற்சித்து வரும் வேளையில் இந்தப் பொருளாதார முன்னேற்றம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது" என தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து