எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறையில் மண்டல மாநாடு வரும் 16 ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தி்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரும் 24.ம்தேதி - ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கியும்; பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று, தீர்மானிக்கப்பட்டது,
அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில், வருகின்ற 16.2.2025 அன்று மண்டல அளவிலான லட்சிய மாநாட்டை, வேலூரில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணை க்கிணங்க, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பூத் வாரியாக அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இப்படிவங்களை கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளைக் கொண்டு, விரைவாக பாசறைக்கு உறுப்பினர்களைச் சேர்த்து, வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள், மாவட்டக் செயலாளர்கள் மூலம் தலைமைக்கு அனுப்பி வைத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


