எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, இனி நானே தலைவர் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், தனது முடிவில் மாற்றமில்லை, என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பா.ம.க., படுதோல்வியை சந்தித்த நிலையில், தேர்தல் கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அடுத்த தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும்போது குட்சிக்குள் சிக்கல் ஏற்படக் கூடாது என எண்ணியே, தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு இனி நானே தலைவர் என அறிவித்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சியின் மூத்த தலைவர்களும், குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். ஆனாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்காத நிலையில், ராமதாஸ் மகள், இதில் தலையிட்டு சமரசத் தீர்வு காண முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தைலாபுரம் இல்லத்தில் 3-வது நாளாக தொடரும் சமரச பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில, தனது முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், பா.ம.க. தலைவர் விவகாரம் குறித்துப் பேச யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |