முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      உலகம்
Murder 2023-07-06

Source: provided

டாக்கா : வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து வடமேற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாசுதேப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாபேஷ் சந்திரா ராய் (வயது 58). இந்து மதத்தின் பிரபல தலைவராக அறியப்பட்ட இவர், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி ராயின் மனைவி சாந்தனா செய்தியாளர்களிடம் கூறும்போது, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா? என உறுதி செய்து கொள்வதற்காக இந்த அழைப்பு வந்தது என கூறியுள்ளார்.

இதன்பின்னர் அரை மணிநேரம் கழித்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், வீட்டில் இருந்த பாபேஷை கடத்தி சென்றனர் என்றார். இதன்பின்பு நரபாரி கிராமத்திற்கு கடத்தி செல்லப்பட்ட அவரை, அந்த 4 பேரும் அடித்து, தாக்கியுள்ளனர் என தி டெய்லி ஸ்டார் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த கொடூர தாக்குதலில், அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரை குடும்பத்தினர் தினாஜ்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார். அந்நாட்டில், இந்து மதத்தின் பிரபல நபராக அறியப்படுகிற பாபேஷ், வங்காளதேச பூஜா உத்ஜபன் பரிஷத் அமைப்பின் பிரல் பிரிவில் துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து