முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த திவேதியின் மனைவி நெகிழ்ச்சி

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

புதுடெல்லி, பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை வரவேற்றுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இதுதான் தன் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியும் இதில் ஒருவர். அவர் தனது மனைவியுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மனைவி கண் முன்னே கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இந்த தாக்குதலை வரவேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், அவர் எங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், அவரது ஆன்மா சாந்தியடையும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து