முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் வறுமையில்லை: பட்டினிச்சாவு இல்லை மதக்கலவரங்கள் இல்லை: முதல்வர் ஸ்டாலி்ன் பெருமிதம்

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
CM-2-2025-05-07

சென்னை, தி.மு.க. ஆட்சியில் வறுமை இல்லை: பட்டினிச்சாவு இல்லை லன்முறைகள் இல்லை மதக்கலவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்

சென்னையில் நடந்த திமுக ஆட்சியின் நான்காண்டு நிறைவு விழா கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் இங்கேபேசினார்கள் அல்லவா? அவர்களின் மகிழ்ச்சியான வார்த்தைகள் கேட்டபோதுஇதைவிட எனக்கு என்ன வேண்டும்!திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடேமகிழ்ச்சியாக இருக்கிறது! அதனால்தான், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, உற்சாகமாகவும் இருக்கிறேன். ஏனென்றால்,நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்றுதமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனென்றால், தங்களுடைய குறைகள் காது கொடுத்துகேட்கப்படுகிறது – தீர்க்கப்படுகிறது என்று தமிழ்நாட்டு மக்கள் மனநிறைவாகஇருக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே மே 7-ஆம் நாள், முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டேன். என் மீது நீங்களும், தமிழ்நாட்டு மக்களும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை என்னால் நெஞ்சைநிமிர்த்தி சொல்ல முடியும்!இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் எவையெல்லாம் இல்லை என்று பட்டியல் போடவேண்டும் என்றால் - எவையெல்லாம் இருக்கும்என்று சாதனை பட்டியல் போடுவோம். ஆனால், இப்போது நான் சொல்லஇருப்பது திராவிட மாடல் ஆட்சியில் எவையெல்லாம் இல்லை என்று பட்டியல்போடவேண்டும் என்றால், வறுமை இல்லை! பட்டினிச் சாவு இல்லை!பணவீக்கம் இல்லை! பெரிய சாதி மோதல்கள் இல்லை!மதக் கலவரங்கள் இல்லை! வன்முறைகள் இல்லை. இப்படி, சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லை, இல்லை, இல்லை என்றசூழ்நிலையத்தான் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம் திராவிட மாடல் அரசின் திட்டங்களால், பயனடைந்தபலருடைய குரல்களை இங்கே அனைவரும் கேட்டோம். இன்றைக்கு நேரில்கேட்டிருக்கலாம்; ஆனால், உங்களைப் போல பல பேருடைய குரல்களை,கடந்த நான்காண்டுகளாக நாள்தோறும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், நான் ஒரு கையெழுத்திடுகிறேன் என்றால்,அதில், பலருடைய வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்! ஏழைகளின் கண்ணீர்துடைக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். சமத்துவத்தை நோக்கி இந்தச் சமூகம் முன்னேற வேண்டும், சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்! இதைத்தான் என்னுடையவாழ்க்கையின் பயனாக நான் நினைக்கிறேன்.

இந்தத் திட்டங்களைப் பொறுத்தவரைக்கும், இதுவரைக்கும் சுமார் ஒன்பதுஇலட்சம் மாணவிகளும், நான்கு இலட்சம் மாணவர்களும், சுமார் 13 இலட்சம்பேர் பயனடைந்திருக்கிறார்கள்! இதனால், கல்லூரிகளில் மாணவ –மாணவிகளுடைய சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது!இப்படி, ஒவ்வொரு பிரிவினருக்கும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கானதிட்டங்கள் - திருநங்கையருக்கான திட்டங்கள் - அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கான திட்டங்கள் - விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு –தொழிலாளர்களுக்கு – மீனவர்களுக்கு – ஆதி திராவிடர் – பழங்குடியினர் -பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – சிறுபான்மையின மக்களுக்கானமுன்னேற்றத் திட்டங்கள் என்று இப்படி எல்லோருக்கும் பார்த்து பார்த்துதிட்டங்களைச் செய்கிறோம்! அந்தத் திட்டங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால், இந்த ஒரு நாள் போதாது. ஒன்றிய அரசு வெளியிடுகின்ற அனைத்துபள்ளிவிவரங்களையும் பார்த்தீர்கள் என்றால், நம்முடைய தமிழ்நாடு தான்முன்னிலையில் முதலிடத்தில் இருக்கிறது! ஒன்றிய அரசின் விருதுகளை வாங்கிகுவித்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்கானவிருதுகளாக! பாராட்டுகளாக! நான் நினைக்கவில்லை. இது தமிழ்நாட்டிற்குகிடைக்கக்கூடிய பாராட்டுக்கள்! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்கள்.

இந்த ஆட்சிக் காலத்துக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதைகடந்து, உங்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று,திராவிட மாடல் ஆட்சிதான் தொடரப் போகிறது. அதனால்தான், நாங்கள்சொல்கிறோம் - “நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு!”என்பதை முழக்கமாக வைத்திருக்கிறோம்!ஆணையிடுங்கள்! தமிழ்நாட்டை அரியணையில் வைத்து பாதுகாத்திட,திராவிட முன்னேற்றக் கழகமும், இந்த ஸ்டாலினும் இருக்கிறேன்! உங்கள்ஆதரவில் நமது திராவிட மாடல் ஆட்சி தொடரும்! தொடரும்! என்று கூறி,விடைபெறுகிறேன்!இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து