முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
CM-2-2025-05-07

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம். 

என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, ‘திராவிட மாடல் ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி. ஒரு கருத்தியலின் ஆட்சி. என நிறுவியிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, ’நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு. என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து