முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமதமாக பந்துவீச்சு: மும்பை அணிக்கு அபராதம்

புதன்கிழமை, 7 மே 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

மும்பை : தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக ஒட்டுமொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

திடீரென மழை...

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. 

திரில் வெற்றி... 

இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

25 சதவீதம்....

இந்த நிலையில் மும்பை அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக ஒட்டுமொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதமாகவும், மற்ற வீரர்களுக்கு போட்டியின் கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து