முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' : 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு - 70 பேர் பலி

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Operation-Sindhoor-2

Source: provided

புதுடெல்லி : இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள்... 

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

‘ஆபரேஷன் சிந்தூர்’... 

இதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் நேற்று (மே 7) அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துல்லிய தாக்குதல்... 

ராணுவத்தின் 24 ஏவுகணைகளும் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகவும், பயங்கரவாத கட்டமைப்பின் பகுதிகளாக இருந்த கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், நிலை வசதிகள் ஆகியவை அழிக்கப்பட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கை விரிவானதாக இருந்தபோதிலும், பாகிஸ்தானின் எந்த ராணுவ கட்டமைப்புகளும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில்... 

ஏவுகணைகள் தரையிலிருந்தும், வான்வழியாகவும் ஏவப்பட்டன. கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நேரலையாக கண்காணிக்கப்பட்டன. இதன்மூலம், குறைந்தபட்ச பொதுமக்கள் உயிரிழப்புகளுடன் இலக்குகள் குறிவைக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களை அழித்தொழிக்க பல போர்முனைகள் ஒரே நேரத்தில் தாக்கின. ஆபரேஷன் சித்தூரில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி கீழ்கண்ட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து முகாம்களின் விபரம்:

தாக்குதல் நடந்த 9 இடங்கள்:

1. முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது.

2. முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும்.

3. கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்: இது ஜம்முவின் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பேஸ் கேம்ப்களாகும். பூஞ்ச் பகுதியில் 2023, ஏப்.20 மற்றும் 2024, ஜூன் 9-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.

4. பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்: இங்கும் ஆயுதங்கள், வெடிப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பதுங்கி வாழ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

5. கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்: லஷ்கர் இ தொய்பாவின் பையாதீன் இங்கு உருவாக்கப்பட்டது. இது 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டது.

பாகிஸ்தானில் உள்ள முகாம்கள்:

6. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்: இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் நான்கு போலீஸார் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றனர்.

7. மெஹ்மூனா ஜோயா முகாம்: பதன்கோட் விமான படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த முகாமில் இருந்து தான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்: கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் இந்த முகாமில் பயிற்சி பெற்றனர். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி இந்த முகாமில் பயற்சி பெற்றவர்கள்.

9. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் தலைமையகம். ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் பெயர் 

திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பங்கரவாத முகாம் மீதான தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து