முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
CM-3-2025-05-07

சென்னை, மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார், அப்போது பேருந்தில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதல்வர் .மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு) பொறுப்பேற்று நான்காண்டுகள்நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இதையொட்டி தலைமைச் செயலகம் வருகைத்தந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து சென்னைஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள விழாவிற்கு செல்லும்வழியில், சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரைசெல்லும் 32-B மாநகரப் பேருந்தில் அரசினர் தோட்டம் அருகில் உள்ள ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் செய்து – முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாள் அறிவித்த 5 திட்டங்களில் ஒன்றானமகளிர் விடியல் பயணம் திட்டத்தின்” கீழ் பேருந்துகளில் பயணம் செய்தபயணிகளிடம் உரையாடினார்.

அப்போது, பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் பயணிகள் இந்தமகத்தான திட்டமான “மகளிர் விடியல் பயணம் திட்டம்” மூலம் நாங்கள்கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருவதால், நேரத்திற்கு வேலைக்குசெல்ல முடிகிறது என்றும், இதனால், மாதம் 2000 ரூபாய் வரையில் சேமித்துவைக்க முடிகிறது என்றும், அந்த சேமிப்புத் தொகையிலிருந்து தங்கள்பிள்ளைகளுக்கான படிப்பு செலவுகளுக்கும், மருத்துவ செலவுகள் மற்றும் இதரசெலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதையும் தெரிவித்து, இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் நான்காண்டு முடிவடைந்து ஐந்தாண்டும்ஆண்டு தொடங்குவதையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்றதங்களது விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.முதல்வர் விடியல் பயணம் திட்டத்தில் மூலம்பயன் பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளைநிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், பேருந்தின் முழுகொள்ளளவு பயணிகளோடு பேருந்து பயணத்தை தொடர வேண்டும் என்றும்நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் .சிவசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து