முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்களுக்கு நீடிப்பு

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
Yercaud 2024-08-25

Source: provided

ஊட்டி : ஊட்டியில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெறும் 127-வது மலர்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,” என மாவட்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்தார். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், இந்த ஆண்டுக்கான ஆய்வு நேற்று (மே 7) நடைபெற்றது. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. 171 பள்ளி வாகனங்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தன. 

இந்த வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, போக்குவரத்து அலுவலர் (பொ) ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முதலுதவி பெட்டியில் மருந்துகள் சரியாக உள்ளதா, காலாவதியான மருந்துகள் இருக்கிறதா, அவசரகால வழி திறந்து மூடும் வசதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியதாவது: “நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 5 நாட்கள் நடைபெறும் 127வது மலர்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

12 மீட்டர் நீளத்துக்கு அதிகமான சாஸிஸ் உள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரங்களில் சமையல் செய்யக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளதால், யாரும் பிளாஸ்டிக் கொண்டு வரக்கூடாது. பிளாஸ்டிக் கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது குறித்து சோதனைச் சாவடிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் யாரும் படுத்து உறங்க கூடாது.” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து