முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

புதன்கிழமை, 7 மே 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

அமெரிக்கா : பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டொனால்ட் டிரம்ப் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார், அடுத்த ஒரு சில நாள்களில் "பூமியை அதிர வைக்கும்" ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாகக் கூறினார். 

அது வணிகம் தொடர்பான அறிவிப்பு அல்ல என்று மட்டும் தெளிவுபடுத்திய டிரம்ப், அதைத் தவிர்த்து வேறு ஒரு விஷயம் இது. ஆனால் நிச்சயம் அது பூமியை அதிர வைக்கும் அறிவிப்பாக இருக்கும், நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அறிமுகப்படவிருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

டிரம்பின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் என்ன சொல்வதற்கு திட்டமிடுகிறார் என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள் என்கின்றன தகவல்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து