முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி அவை விதி 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக, பண்டிகை கால முன்பண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில், இதுவரை வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரம், இனி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகளின் கல்வி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பண்டிகை கால முன்பணம் பெறும் தகுதியுடைய அனைவருக்கும், இந்த அரசாணை பொருந்தும். அதன்படி அவர்கள் ரூ.20 ஆயிரத்தை பண்டிகை கால முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பணத்தை பிடித்தம் செய்யும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து