முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையி்ல் புதிதாக 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
CM-4-2025-05-07

சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் -  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொது மக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களைதொடங்கி வைத்தல், புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழையபேருந்துகளை புதுப்பித்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல்,பணிச்சுமையை குறைக்கும் விதமாக நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தல், பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறுதிட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.இந்த சேவைகளால், மகளிர், மாணவ, மாணவியர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள், திருநங்கைகள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், மூத்தகுடிமக்கள் மற்றும் குறிப்பிட்ட இதர பிரிவினருக்கு கட்டணமில்லாபயணச்சலுகை வழங்கப்படுகிறது.

சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட  மகளிர் விடியல் பயணம்திட்டம்; மூலம் 684 கோடி பயண நடைகள்  மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் . மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில், தமிழ்நாட்டின்அனைத்துப் பகுதிகளிலும், பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, 3,727 புதியபேருந்துகளும், 1500 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளன.இதன் தொடர்ச்சியாக, சென்னை தீவுத்திடலில்நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 27 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 114 புதிய பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 31 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு14 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 புதிய பேருந்துகளும் என மொத்தம் 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின்பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த 214 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பினைபெற்ற “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 70 நகரப் பேருந்துகளும்அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பேருந்துகளின் சேவைகளை தொடங்கிவைத்த முதல்வர் பேருந்தில் ஏறி பேருந்தினை பார்வையிட்ட பிறகு,விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன் பெறும் பெண்களுக்காக முறையாகபேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்லவேண்டும் என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர்  உதயநிதிஸ்டாலின்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமோழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் . டி.ஆர். பாலுஆ. ராசா,  தயாநிதி மாறன், திரு. தலைமைச் செயலாளர்.முருகானந்தம், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி,, போக்குவரத்துக் கழகங்களின்மேலாண் இயக்குநர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து