முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் மே 28-ல் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Indian-Navy 2024-01-30

Source: provided

புதுடெல்லி : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.

இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து