முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ராஜஸ்தான், கேரளா, பீகாரில் 9 பேர் கைது

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Jail

ஜெய்ப்பூர், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போலி தேர்வர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப மோசடி சாதனங்களை உள்ளடக்கிய ஒரு மோசடியை போலீஸார் முறியடித்தனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் ஜெய்ப்பூரின் ஜகதாம்பா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து போலி நுழைவுச் சீட்டுகள், ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்கள், புளூடூத் சாதனங்கள், சிம் கார்டுகள், ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

அங்கிருந்த அஜித் குமார், சோகன் லால் சவுத்ரி (இருவரும் ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முதுகலை மாணவர்கள்), ஜிதேந்திர சர்மா (கர்நாடகாவை சேர்ந்த எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்) ஆகிய மூவரை கைது செய்தனர். பிறகு ரோகித் கோரா, சஞ்சய் சவுத்ரி ஆகிய 2 தேர்வர்களை கைது செய்தனர்.  

இதுபோல் பீகாரில் நுழைவுச்சீட்டு மோசடி, ஆள்மாறாட்டம் தொடர்பாக பெகுசராய் சிறை மருத்துவர் ரஞ்சித் குமார், தர்பங்காவை சேர்ந்த ராம்பாபு மாலிக் ஆகிய இருவரை சமஸ்திபூர் மாவட்டத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இதுபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய ஒரு மாணவருக்கு போலி நுழைவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்த கிரீஷ்மா என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த மாணவரும் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து