முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடல்

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Air-India 2024 08 18

Source: provided

ஜம்மு : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்தியா நடத்திய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கையால், ஐந்து விமான நிலையங்களிலும் விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்கு கமர்ஷியல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். லே, ஜம்மு, அமிர்தசரஸ், தரம்சாலா ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கள் விமான சேவை புதன்கிழமை (மே 7) பகல் 12 மணி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மற்றொரு விமான நிறுவனமான இண்டிகோவும் தங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

விமான சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளம் மூலம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதை பொறுத்து பயணிகள் தங்கள் வான்வழி பயணத்தை திட்டமிடலாம் என கூறியுள்ளது. டெல்லிக்கு வடக்கே விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து