முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 7 மே 2025      தமிழகம்
RBU 2023-08-22

Source: provided

மதுரை : நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என்று தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது-

இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நான்காண்டுகளை  கடந்து, 5- வது ஆண்டு தொடங்கியதில் திமுக அரசு சவால்களை சந்தித்து சாதனை ஆக்கியது என்று  விளம்பரங்கள் பக்கம், பக்கமாக இன்றைக்கு வந்து கொண்டே இருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டின் மக்களின் நிலை என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்ற நிலை தான் இன்றைக்கு களத்திலே காணப்படுகிறது. மொத்தத்தில் திமுக அரசு சாதனைகளை, சவால்களை சந்தித்து சாதிக்கவில்லை என்பதை தான் நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள், 2 லட்சம் புதிய அரசு பணியிடங்களை பூர்த்தி செய்வோம் என்ற வாக்குறுதி எந்த நிலையில் இருக்கிறது.பெட்ரோல்,டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? கேஸ் மானியம் நூறு ரூபாய் என்ன ஆனது. இதெல்லாம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி இதை கொடுத்து தானே? மக்களிடத்தில்  கொடுத்த வாக்குகளைப் பற்றிகவலைபாடமல் ஆட்சி அதிகாரத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் இன்றைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை விட கார் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்களே?. அந்த அணிவகுப்பை பார்க்கிற போது ஏதோ அமெரிக்க அதிபரை போல உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு உள்ளீர்கள் இந்த பகட்டு ஆடம்பர அணி வகுப்பினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது?.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தினந்தோறும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பினால் அது குறித்து இதுவரை நீங்கள் ஒரு பதில் கூட சொல்லவில்லை. சட்டமன்றத்தில் அரசு ஊழியர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் அவர்களை மேலும் கடனாளியாக 9 அம்ச திட்டத்தை அறிவிக்கிறீர்கள்.இன்னமும் எட்டு மாதம்தான் உங்களுக்கு ஆட்சி உள்ளது ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை.இந்த கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் வீட்டுக்கு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நான்காண்டு காலத்திலே  அதிகமாக நீதிமன்றத்தினுடைய,நீதி அரசர்களின் கண்டனத்திற்கு உள்ளான அரசு இந்த திமுக அரசு தான் இது உண்மையா? இல்லையா?.பாலியல் வன்கொடுமையை நீங்கள் எதிர்கொள்வதிலே, தடுப்பதிலே, கையாளுவதிலே நீதிமன்றத்தினுடைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டதா இல்லையா?

நிர்வாக ரீதியாக நீங்கள் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்றங்களுடைய கண்டனங்களுக்கு உள்ளீர்களா? இல்லையா? எத்தனை முறை நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளாக இருக்கிறது? காவல்துறை செயல்படுகிறதா என்று கூட  நீதிமன்றங்கள் கண்டனங்கள் தெரிவித்து இருக்கின்றன?.  இதிலே 2.0 லோடிங் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

தமிழகத்தின் நிதி அதள பாதாளத்தில் இருந்து கடன் சுமையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்து  அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா தொழில் நிறுவனங்களை அங்கே கொண்டு செல்கிறார்கள்.அதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.அரசு நிர்வாகம் உறங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால் நீங்கள் நடந்து கொண்டு இருக்கீர்கள்.நீங்கள் உறங்கினாலும் அரசு நிர்வாகம் நடக்க வேண்டும் அதுதான் ஒரு சிறந்த நிர்வாகம். ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை உறங்க வைத்துவிட்டு, மக்களை வாட்டி வதைத்து விட்டு நீங்கள் நடந்து கொண்டே இருப்பதுனாலே தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பலன்? இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி. 

பக்கம், பக்கமாக விளம்பரம் கொடுக்கிற நீங்கள்,பக்கமாக நிற்கக்கூடிய மக்களுடைய நலனை ஏன் சிந்திக்க மறந்தீர்கள்?. உங்கள் பக்கமாக மக்கள் நிற்கிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிற நீங்கள் இப்போது உங்களிடத்தில் இருந்து அந்த மக்கள் விலகி இருக்கிறார்களே?. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது.போதை பொருள் கேந்திர நிலையமாக தமிழகம் மாறிவிட்டது. மக்களுக்கு சேவை ஆற்றும்  கடமையை நீங்கள் சாதனை என்று சொன்னால் எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார் ? இன்றைக்கு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தவறி விட்டார்.அம்மாவின் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ,குடிமராமத்து திட்டம் இது போன்ற வரலாற்று திட்டங்களை செய்து இந்திய அளவில் சாதனை படைத்தது. ஆனால் இன்றைக்கு திமுக அரசு கடன் வாங்குவதற்கு முதலிடம், நிர்வாக குளறுபடிகளில் முதலிடம், பாலியல் வன்முறையில்முதலிடம்,சட்ட ஒழுங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றில் முதலிடம், இன்றைக்கு நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?. இன்றைக்கு தமிழகம் சுடுகாடாக மாறிவிட்டது தான் உங்கள் சாதனை. நீங்கள் செய்தது சாதனை அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு வேதனை. இந்த வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இனியும் இந்த வேதனை தொடரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து