முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் தாக்குதல்? பாக். ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுப்பு

வியாழக்கிழமை, 8 மே 2025
India---Pak-missile

பஞ்சாப், பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்கி அழித்துள்ளது. இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் - பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்- 15இ ஏவுகணை எனத் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து