முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளில் 96.90 சதவீதம் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

Source: provided

 புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் இல்லை. அதனால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பின்பற்றி வந்தன. ஆனால், அங்கு கடந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன.

கடந்த மார்ச் - ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 பேர் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நேற்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 96.90% ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து