முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      விளையாட்டு
Rokith

Source: provided

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். 

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் அஜித் வடேகர், சரத் பவார் பெயரிலும் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன. ரோகித் சர்மா தற்போது ஐ.பி.எல். மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 கோப்பைகளை வென்ற்து குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________________

ஐ.சி.சி. பட்டம: பவுமா கருத்து

2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடர்பாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்.  மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11-ம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.என்று பவுமா தெரிவித்துள்ளார். 

___________________________________________________________________________________________________

லா லிகா தொடர்: பார்சிலோனா சாம்பியன்

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. 2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா நேற்று எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது.இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து பார்சிலோனா.  லா லிகா கோப்பையை வென்றது.

ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது

___________________________________________________________________________________________________

பணக்கார வீரர்: ரொனால்டோ முதலிடம்

பிரபல போர்ப்ஸ்  பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது போர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.

சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார். இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத்  தாண்டியது. களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________________

இத்தாலி ஓபன் : அரையிறுதியில் அல்காரஸ் 

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜாக் டிராபரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து