முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 17 கிராமங்களுக்கு மின் வசதி

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
Power 2023 06 09

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில நக்சல் பாதிப்புக்குள்ளான 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். பல்வேறு கிராமங்களில் இவர்களின் கட்டுப்பட்டில் வருவதால் நவீனகால வசதிகள் மட்டுமல்லாது, பன்னெடும் காலமாக மற்றவர்கள் அனுபவித்து வரும் வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 கிராமங்கள் முதல் முறையாக மின்சார வசதியை பெற்றுள்ளன. அம்பாகர்க் சவுக்கி மோஹ்லா, மன்பூர் ஆகிய மாவட்டங்களின் கீழ் உள்ள இந்த கிராமங்கள் அனைத்தும் நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை. மலையும், அடர்த்தியான வனப்பகுதி கொண்ட கிராமங்கள் ஆகும்.

கிட்டத்தட்ட 3 கோடி ருபாய் செலவில் அரசின் திட்டத்தின் கீழ், இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. மொத்தம் 540 குடும்பங்கள் மின்சார வசதியை பெறுகின்றனர். மின்வசதி கிடைத்துள்ள கிராமங்கள் விவரம் வருமாறு;-

17 கிராமங்களில் 540 குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 274 குடும்பங்களுக்கு ஏற்கனவே மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற குடும்பங்களுக்கும் மின்சாரம் பெறும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. அதிக பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதே அரசின் நோக்கம். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து