முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.211.57 கோடியில் கோவை மத்திய சிறைச்சாலைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
CM-1-2025-05-19

சென்னை, 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.509.49 கோடி செலவில் 3051 காவலர் குடியிருப்புகள், ரூ.59.75 கோடி செலவில் 51 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.122.40 கோடி செலவில்    18 காவல்துறை இதரக் கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து  வைக்கப்பட்டுள்ளன.  

சென்னை மாவட்டம் –  ஆயிரம் விளக்கு பகுதியில் மேன்ஷன் சைட் (Mansion Site)  என்ற இடத்தில் 380 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 896 காவலர் / தலைமைக் காவலர் குடியிருப்புகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சியில் 76 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 222 காவலர் குடியிருப்புகள், என மொத்தம் 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகளுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார். சிறைகள் மற்றும்  சீர்திருத்தப் பணிகள் துறை கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் இடநெருக்கடி காரணமாக கோயம்புத்தூர் புறநகர் பகுதியான பிளிச்சி பகுதிக்கு மாற்றியமைக்கும் வகையில் முதற்கட்டமாக 211 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆண்கள் சிறை, 111 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றிற்கு  முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம்,  உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்,  காவல்துறை தலைமை இயக்குநர்.சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். சைலேஷ் குமார் யாதவ்,  சிறைகள் மற்றும்  சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ்வர் தயாள்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து