எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மையை உறுதி செய்வதற்கும், கழிவுகள் இல்லாத ரயில் பாதைகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இந்தாண்டு தொடக்கம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் எச்சில் துப்பியவர்கள் மற்றும் அசுத்தம் செய்தவர்கள் என மொத்தம் 31,576 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 32,31,740 வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத நடவடிக்கைகள் மூலம் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். மேலும், ரயில் பயணிகளிடம் தூய்மையை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


