முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Mamta 2024-12-07

புதுடெல்லி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் செய்தியை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில், பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், யூசுப் பதானோ அல்லது திரிணமூல் காங்கிரஸின் வேறு எம்.பி.க்கள் யாருமோ அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற மாட்டார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும்,  எந்தக் கட்சியிலிருந்து யார் செல்வார்கள் என்பதை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு நல்ல நோக்கத்தைக் காட்ட வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பரந்த விவாதங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து