எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர்அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் - முதல்வர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர்மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலைமற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வரவேற்புரை ஆற்றினார். பின்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
இயற்கைச்சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும்,அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது.இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையைஎதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான்இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மைஉள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர்வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்றபாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ளகடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள,அனைத்து மாவட்ட கலக்டர்களும் , மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும்வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும். பேரிடர்மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்றவசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல;பேரிடர் மேலாண்மைத் திட்டம் - தகவல் தொடர்புத் திட்டம் - முதல்நிலைமீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அ தொலைபேசி எண்கள்அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.\வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம்ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பலபாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச்சொல்ல விரும்புகிறேன்.
பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக்கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவதுஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான். எனவே, சோஷியல்மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படிஎடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்றுசேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்யவேண்டும். குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்றமக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மைநம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்துகொள்ளுங்கள். பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும்அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்ததகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும்என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சிலஅசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாடு\முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து,அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம்,ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத்தடுக்க வேண்டும்.
அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு\தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்புகிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத்தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.அடுத்து,\ சென்னை மாநகராட்சியைப்பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடியமழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலத்துக்குத்தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாகமேற்கொள்ளவேண்டும். அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும்17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடிஉயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர்இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத்தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவைசாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்து, வேளாண்மை–உழவர் நலத்துறையைப்பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார்,குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளபல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன.எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்மேற்குபருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால்குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால்,வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டஎல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவைசிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண்களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு\கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர்சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள்மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதற்கு பிறகு, தென்மேற்குபருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்துவிளக்கப் படத்தின் மூலம், வருவாய்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,வி ளக்கினார்.பின்னர், நகராட்சி நிருவாகத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும்உழவர் நலத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,நீர்வளஆதாரத் துறைகளைச் சார்ந்த செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்ஆகியோர், தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும்அமைச்சர்கள் துறை அதிகாரிகளுக்கு தங்களதுஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.கூட்டத்தின் இறுதியில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்நன்றியுரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு.எ.வ.வேலு,.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்காவல் துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.


