முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் 2-வது பூத் கமிட்டி மாநாடு: 'ரோடு-ஷோ' நடத்த விஜய் திட்டம்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Vijay 2023-12-30

Source: provided

சென்னை : த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை வேலூரில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சி தலைவர் விஜய் வலுப்படுத்தி வருகிறார். 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் சுமார் 69 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதல்கட்ட மாநாடு கோயம்புத்தூரில் 2 நாட்கள் நடந்தது. 13 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் வேலூரில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யும் பணி சில தினங்களாக நடந்தது. இதற்காக வேலூர், கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் வேலூரில் மாநாடு நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வேலூரில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார். 'ரோடு-ஷோ' நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து