முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் கனமழை காரணமாக கடலூரில் 250 ஏக்கர் குறுவை விளைநிலங்கள் பலத்த சேதம்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Kadaloor-Rain-2025-05-19

கடலூர், கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது, தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. 

இந்த மழையால் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர்,கானூர், பேரூர், காவாலகுடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை பருவ நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் சுமார் 250 ஏக்கர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை தண்ணீர் வடியாமல் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன. கடன் வாங்கி போர்வெல்லில் குறுவை விவசாயம் செய்துள்ளோம். தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

 மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பக்காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த மழை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து